இலங்கையில் அவசரகால நிலைமை மேலும் நீடிப்பு: ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
இலங்கையில் தற்போது நிலவும் பொது அவசரகால நிலைமையைக் கருத்திற்கொண்டு, ஏற்கனவே நடைமுறையிலுள்ள அவசரகால நிலையை மேலும் நீடிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளரினால் (28.12.2025) இந்த அறிவித்தல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் பொதுப் பாதுகாப்பு, அமைதியைப் பேணுதல் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகள் மற்றும் வழங்கல்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் இயல்பு நிலையைப் பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள மேலதிக அதிகாரங்கள் இந்த நீடிப்பின் மூலம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

