இலங்கையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.

♦இலங்கையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.

♦எல்லைத்தாண்டி இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கைதான 3 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

♦சந்தேகநபர்கள் நேற்று 28/12 அதிகாலை கைது செய்யப்பட்டு, கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் பயணித்த படகு ஒன்றும் கடற்படையினால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

 

♦இதனையடுத்து அவர்கள் நேற்று (28) முற்பகல் ஊர்காவற்றுறை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களை எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

Recommended For You

About the Author: admin