பாராளுமன்ற ஓய்வூதியம் வேண்டுமாம். வேறு தொழில் செய்யாமல் அரசியலுக்கு வந்து இருக்கிறார்களாம்.
பலர் ஏழ்மையில் இருக்கிறார்களாம் என்று அதிசொகுசு வாழ்க்கை இல்லாமல் போக போகிறது என அறிந்து எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்தவர்களால் இன்று பாராளுமன்றம் மரண வீடு போல ஒரே ஒப்பாரியும் ஓலமாகவும் இருந்தது.
ஆனால் இதனை துளியளவேனும் காதில் வாங்காமல் இந்த அரசு
மாதந்தோறும் 330 இலட்சம் ரூபா மக்கள் பணத்தில்,
சாகும் வலை சொகுசு வாழ்க்கை வந்த ஒரு குறிப்பிட்ட ஒரு கூட்டத்தின் ஒரு வரப்பிரசாதத்தை மக்கள் அள்ளி இறைத்த மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலதுடன் இன்று இரத்து செய்து இருக்கிறது.
மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வைத்துக்கொண்டு இந்த அரசு என்ன செய்கிறது என கேள்வி எழுப்புவர்களுக்கு இதுபோன்ற தேவையில்லாத அணியை பிடுங்குவதற்கு தான் என்பதை இதன் ஊடாக புரிந்து கொள்ளலாம்.
அரசியல்வாதிகள் எப்போதும் மக்கள் முன் பேசும் போது தாங்கள் தனிப்பட்ட இலக்குகளுக்காக அல்ல, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகவே அரசியல் செய்கிறோம் எனக் கூறுவார்கள்.
ஆனால் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றி சதாகாலமும் மக்களுக்காக சேவை செய்யும் ஒருவரை தேடி கண்டு பிடிப்பதென்பது அவ்வளவு கடினமான ஒன்று.
அவர்களுக்கு தொலைபேசி கட்டணம், எரிபொருள் கொடுப்பனவு, உத்தியோகபூர்வ இல்லம், வாகனம் பாதுகாப்பு என உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன.
இதற்கு அப்பால் சென்று இலட்சக்கணக்கில் காப்பீடு, விசேட அனுமதிப்பத்திரங்கள், இல்லங்கள், ஜனாதிபதி நிதியம் என அத்தனை வரப்பிரசாதங்கள் தாராளமாக வழங்கப்பட்டது.
அரச சேவையில் இருக்கும் சாதாரண பிரஜைக்கு ஓய்வூதியம் கொடுப்பனவு வழங்கபட வேண்டுமானால் 60 வயது பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
ஆனால் பாராளுமன்றத்தில் 5 ஆண்டுகள் இருந்தாலே எம்.பிக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இந்த நாட்டை பீடித்த பொருளாதார நெருக்கடியின் அகோரமும்
டித்வா பேரழிவின் சீற்றமும் இன்னும் குறையாது இருக்க அரசியல்வாதிகள் மாத்திரம் சொகுசு வாழ்க்கை வாழ்வது உசிதமா இல்லை தானே அப்படியென்றால் தேவையில்லாத அத்தனை அதிசொகுசையும் நிறுத்த வேண்டும் அல்லவா?
இன்று அதுதான் நடந்து இருக்கிறது.
இன்று முதல் பாராளுமன்ற ஓய்வூதிய விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த அரசு தேவையற்ற சலுகைகளை நீக்கி,
மக்களின் வரிப்பணத்தை சேமித்து, அதை மக்களின் நலனுக்காக பயன்படுத்தும் என அளித்த வாக்குறுதியின் முக்கியமான பகுதியை நிறைவேற்றி இருக்கிறது.
இதுவரை 485 பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்பட்ட ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு, மாதத்திற்கு 330 இலட்சம் ரூபாவும் ஆண்டிற்கு 3960 இலட்சம் ரூபாவும் இதன் பின்னர் மக்களுக்காக சேமிக்க படபோகிறது அவ்வளவு தான்.

