வவுனியாவில் வீதியோரக் கடைகளை அகற்றும் அதிகாரிகள்..!

வவுனியாவில் வீதியோரக் கடைகளை அகற்றும் அதிகாரிகள்..!

வவுனியாவில் வீதியோர வியாபாரங்களை அகற்றும் செயற்பாட்டினை வவுனியா மாநகர சபை முன்னெடுத்து வருகிறது.

நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு வியாபாரம் வவுனியாவில் களைகட்டியுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நடைபாதையை தடைசெய்யும் முகமாக கொட்டகை அமைத்து வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

அத்தோடு வீதியோரங்களிலும் பொதுமக்களிற்கு இடையூறு ஏற்படும் வகையில் அங்காடி வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருவதோடு, விபத்துக்களும் ஏற்படும் காரணமாகிறது.

 

இந்நிலையை கருத்தில் கொண்டு மாநகர சபையினரால் நடைபாதை மற்றும் வீதியோரங்களை ஆக்கிரமித்து வியாபாரத்துக்காக அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகளையும் அவற்றிலுள்ள பொருட்களையும் அகற்றும் செயலில் மாநகர சபை வருமானவரி பரிசோதகர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin