இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் கல்முனை வடக்கு இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக கல்முனை வடக்கு பிரதேசசெயலக இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி.நா சிறிப்பிரியா அவர்களின் ஒருங்கிணைப்பில் பிரதேசசெயலாளர் திரு ரி.ஜே. அதிசயராஜ் அவர்களின் தலமையிவ் இடம்பெற்றது.
இச்செயலமர்வில் மாவட்ட செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் திரு.கு.ஜெயராஜி அவர்கள் கலந்து கொண்டு அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்துரைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் அறநெறிப்பாடசாலை பாடத்திட்டம், பாடசாலை பதிவேடு, ஆசிரியர் குறிப்பேடு, மாணவர்குறிப்பேடு, ஆசிரியரர்களுக்கான நூலகக்கொடுப்பணவு, ஆசிரியரின் சீருடை, அறநெறிப்பாடசாலைக்கு மாணவர்களை அதிகரிக்க எதிர்காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை, பெற்றோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு, மேலதிகமாக ஆசிரியர்களை இணைத்துக்கோள்ளும் நடவடிக்கை, ஆக்கத்திறன் பேட்டிகளில் மாணவர்களின் பங்குபற்றல், குருபூசை நிகழ்வு, யோகாசணம், பண்ணிசை வகுப்புக்கலை ஆரம்பித்தல் பொறுப்பாசிரியர்களின் கடமைகள், இசைக்கருவிகள் வழங்குதல், அறநெறிப்பாடசாலைக்கான கட்டிட நிதிவுதவி, அறநெறிப்பாடசாலைகளுக்கான முன்மாதிரியான நூலகம் அமைத்தல், இறுதியாண்டு பரீட்சை,தர்மாசிரியர்
பரீட்சை, அறநெறிச்சாரம் நிகழ்வில் மாணவர்களை பங்குபற்றச்செய்தல்
தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டதுடன் எதிர்வரும் ஆண்டில் சிறப்பா முறையில் இடம்பெறுவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றது.


