சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட சீனத் தூதுக்குழுவொன்று இன்று (23) காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.
இன்று முற்பகல் 9.45 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான விமானம் மூலம் அந்தக் குழு நாட்டை வந்தடைந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
அவர்களை வரவேற்பதற்காக இலங்கையிலுள்ள சீனத் தூதுவர் மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்துள்ளனர்.

