தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு: 34 வயது நபர் பலி
தெஹிவளையில் நேற்று மாலை (06) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவின்படி, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான பாதிக்கப்பட்டவர் உடனடியாக களுபோவிலையில் உள்ள கொழும்பு தென் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு அனுமதிக்கப்பட்ட வேளையில் அவர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காணவும், இந்தச் சம்பவத்துக்கான நோக்கம் என்ன என்பதைக் கண்டறியவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆரம்பக்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து மேலதிக விபரங்கள் வெளியிடப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

