நாட்டின் சில பகுதிகளில் இன்று 50 மி.மீ இற்கும் அதிகமான கனமழை எதிர்பார்ப்பு
நாட்டின் மீது வடகிழக்கு பருவமழை நிலை படிப்படியாக உருவாகி வருகிறது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
நாட்டின் மற்ற பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னரே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான ஓரளவு கனமழை பதிவாக வாய்ப்புள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

