இயற்கை அனர்த்தத்திற்கு ஜனாதிபதி பொறுப்பாகமாட்டார்..!
ஜீவன்
நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்ததிற்கு நாட்டின் ஜனாதிபதி பொறுப்பு கிடையாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்
எனவே பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஸ்கெலியா சாமிமலை பெயாலோன் தோட்டப் பகுதியில் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டு அங்குள்ள பாடசாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள 47 குடும்பங்களை சேர்ந்த 132 பேரை பார்வையிட்டதன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மவையக பெருந்தோட்ட பகுதிகளில் மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் சுகாதாரம் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் மேலும் குறிப்பிட்டார்

