சரியாயின் சரி:பிழையெனின் பிழை..!

சரியாயின் சரி:பிழையெனின் பிழை..!

அரசாங்கமோ, எதிர்கட்சியோ, சரியானதை ஆதரிப்போம், பிழையை எதிர்ப்போம் என தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன்.

பெரும்பான்மை அரசியல்வாதிகள் எல்லோரும் ஒன்றுதான்.

சில வேளை, கெஞ்சுவார்கள். பல வேளை மிஞ்சி இனவாதம் பேசுவார்கள்.அவர்கள் மத்தியில், எமது தனித்துவங்களை இழக்காமல் கூடி பேசி காரியம் சாதிக்க மட்டுமே எம்மால் முடியும். இலங்கையில் சிறுபான்மை கட்சிகள் அதைதான் செய்ய முடியும்.

சுனாமி பேரழிவின் போது வட-கிழக்கு தமிழ் உடன் பிறப்புகளுக்காக சர்வதேச பங்களிப்புடன் எடுக்க பட்ட மீள் கட்டமைப்பு முயற்சிக்கு எதிராக இனவாதம் பேசி, சிங்கள மக்களை தூண்டி விட்டு, அதை அடியோடு தடுத்து நிறுத்தி, அரசியல் செய்த கட்சி ஜேவிபி

பொருளாதார நெருக்கடியில், முழு நாட்டு மக்கள், தவித்த போது, வெளி நாட்டு இலங்கையர்களை இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டாம் என அரசியல் செய்த கட்சி ஜேவிபியே.

அரகலய கிளர்ச்சியை, அதை நடத்திய இளைஞர்களை “நாடாளுமன்றத்திற்கு தீமூட்டுங்கள்” என வன்முறை செய்ய தூண்டி, அரசியல் செய்த கட்சியும் ஜேவிபியே என குற்றஞ்சுமத்தியுள்ளார் மனோகணேசன்.

நாளை அவசியமானால், சில வருடங்களுக்கு முன் எனக்கும், சூஞானசாரருக்கும் இடையில் நடந்த சண்டையை மறந்து விட்டு, அனுராதபுரத்துக்கு கூட அவருடன் போய் அங்கு வாழும் நமது மக்களுக்காக அவரை பேச வைக்க முயல்வேன் எனவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுகட்சியின் இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் சகிதம் கண்டிக்கு இனவாத கட்சி பிரதிநிதிகள் சகிதம் மனோகணேசன் அண்மையில் கண்டியில் முன்னெடுத்த ஆய்வு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin