இன்றைய தொடருந்து சேவைகள் பற்றிய அறிவிப்பு..!

இன்றைய தொடருந்து சேவைகள் பற்றிய அறிவிப்பு..!

பிரதான மார்க்கத்தில் இன்று (01) 19 ரயில் சேவைகளை இயக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

அத்துடன், கரையோர மார்க்கத்தில் 34 ரயில் சேவைகள் இயக்கப்படும் எனவும் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

 

பிரதான ரயில் மார்க்கத்தில் காணப்படும் தடைகள் காரணமாக, சம்பந்தப்பட்ட ரயில்கள் கொழும்பு கோட்டையிலிருந்து எம்புல்தெனிய வரைக்கும், எம்புல்தெனியிலிருந்து கொழும்பு கோட்டை வரைக்கும் மாத்திரமே அந்த ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன.

 

இது தவிர, புத்தளம் மார்க்கத்தில் 18 ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளதுடன், குறித்த ரயில் சேவைகள் கொழும்பு கோட்டையிலிருந்து நீர்கொழும்பு கொச்சிக்கடை வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அத்துடன், களனிவெளி மார்க்கத்தில் 10 ரயில் சேவைகளை இயக்கவும் ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Recommended For You

About the Author: admin