கண்டியில் மண்சரிவு 3 பேர் பலி, நால்வர் மாயம்.!!
கண்டி, உடுதும்பர பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கண்டி மாவட்டத்திற்கு அவசர அனர்த்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும சீரற்ற வானிலையை அடுத்து பெய்யும் கடும் மழையால் கண்டி மாவட்டம் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.


