மகாவலி கங்கைப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, ஆற்றின் இரு மருங்கிலும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் அனைவரும், தாமதிக்காமல் இப்பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் (Irrigation Department) அவசரமாகக் கேட்டுக்கொள்கிறது.

