விதாதா அலுவலர்களுக்கான மாதாந்த முன்னேற்ற கலந்துரையாடல்..!
விதாதா அலுவலர்களுக்கான மாதாந்த முன்னேற்ற கலந்துரையாடல் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்ஷினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (26.11.2025) காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் கடந்த கூட்ட அறிக்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், தொடர்ந்து பிரதேச செயலக ரீதியாக விதாதா நிதி ஊடாக நடைபெற்ற செயற்திட்டங்கள், உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வுகள், அடுத்த வருடத்திற்கான திட்ட முன்மொழிவுகளை தயாரித்தல் மற்றும் விதாதா வள நிலையங்களுக்கு தேவையான கணணி தேவைப்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட விதாதா உத்தியோகத்தர் திருமதி கோமதி மாயக்கிருஷ்ணன்,
மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக விதாதா உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


