சாவகச்சேரியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வை மற்றும் அகவை நாள்..!
சாவகச்சேரி நகர்ப்பகுதியில் இன்று (26.11.2025) புதன்கிழமை பிற்பகல் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 71ஆவது பிறந்த தினத்தை ஒட்டிய நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
இதன்போது அடுத்த சந்ததிக்கு இனத்தின் வரலாற்றை கடத்தும் முனைப்பில் சிறார்களின் கைகளால் ஈகைச் சுடரேற்றப்பட்டு -மாவீர்களுக்கான மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அத்துடன் 71வது பிறந்த தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியதுடன் 71பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
சாவகச்சேரி நகரசபையின் உபதவிசாளர் கிஷோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளில் பிரதேசசபை,நகரசபை உறுப்பினர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


