தொழில் முயற்சியாளர்களுக்கான வியாபார மேம்படுத்தல் பயிற்சி நெறி நிகழ்வு..!
தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் ஆசியா பவுண்டேசன் (Asia Foundation ) நிதி அனுசரனையின் வடமாகாண பிரதேச அபிவிருத்தி வங்கியினால் தொழில் முயற்சியாளர்களுக்கான வியாபார மேம்படுத்தல் தொடர்பான பயிற்சி நெறி நிகழ்வு மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் செல்வி வி.தர்சினி தலைமையில் இன்றையதினம் (21.11.2025) காலை 10.00மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்துதெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள்
இன்றைய தினம் வழங்கப்படும் கடன் வசதிகள், AI தொழில்நுட்பம், தரமிடல், Cyber security மற்றும் பொதியிடல் தொடர்பாக தொழில்முயற்சியாளர்களுக்கு கருத்துரைகள் வழங்கப்பட்டதாகவும், ஆரம்பத்தில் தொழில் முயற்ச்சியாளர்கள் மேற்கொண்ட பொதியிடலுக்கும் தற்போதுள்ள பொதியிடலுக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், உற்பத்திப் பொருட்களின் தரம் முக்கியமாக பொதியிடலில் தங்கியிருப்பதாகவும் , பொதியிடலில் எமது மாவட்டமும் வளர்ச்சி பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார். இப்பயிற்சிகள் தொழில்முயற்ச்சியாளர்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் எனவும் இப்பயிற்சிகள் மூலம் தொழில்முயற்சிகள் மேலும் வளர்ச்சி யடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்களால் Cyber security தொடர்பான பயிற்சி நெறியில் கலந்துகொண்ட 120 தொழில் முயற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வடமாகாண பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளர்
சிரேஸ்ட திரு. உதய் ரணதுங்கா , ஆசியா பவுண்டேசன் உத்தியோகத்தர்கள , சிறு தொழில் முயற்சி அபிவிருத்திபிரிவின் முகாமையாளர், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் தொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.


