அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்- GMOA நாளை தொழிற்சங்க நடவடிக்கையில்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்- GMOA நாளை தொழிற்சங்க நடவடிக்கையில்!

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கு முறையாகத் தீர்வு காணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாளை (நவம்பர் 17) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

 

தமது கோரிக்கைகள் குறித்து அரசாங்கத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதற்குச் சாதகமான பதில் கிடைக்காததால் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

சுகாதாரத் துறையின் முக்கியப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை என்ற அடிப்படையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: admin