வரலாறு படைத்த திருவருள்; அசாம் மொழியில் திருவாசகம்

அசாம் கவுகாத்திப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் விசயகுமார் அவர்கள்
திருவாசகம் முழுவதையும் அசாம் மொழியில் தந்துள்ளார் என்ற மகிழ்ச்சித் தகவலை இலங்கை சிவசேனை வெளியிட்டுள்ளது.

From
மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன்
Maravanpulavu K Sachithananthan

வரலாறு படைத்த திருவருள்
HISTORY IN THE MAKING

A historical moment in Saiva Tamil literature movement.

658 hymns of Thiruvasakam by Manickavasakar composed 1200 years ago are now available to Assamese Hindus and others interested in Saiva literature.

Funded by a Saiva Tamil devotee in Singapore, Professor Dr. Vijayakumar of Gauhati University, Assam, translated the hymns from Tamil to Assamese.

Assamese translation of Thiruvasakam is available in www.thevaaram.org.

Soon it will be in print as book. Sponsors welcome.

With the blessings of Sivagami and Nataraja peruman at Chidambaram and Dharumai Aatheenam, I co-ordinated this translation effort of Thiruvasagam to Assamese.

Thiruvasagam translation is available at www.thevaaram.org in 10 languages: German (1925) Hindi (1958) English (1985) Sanskrit, Telugu, Kannada, Malayalam, Sinhalese, Malay, Assamese.

சிங்கப்பூர்ச் சைவத் தமிழ் உள்ளத்தார் அவர்களுக்கு

வணக்கம்
திருவருள் துணையுடனும்
தங்களுடைய நிதிப் பங்களிப்புடனும்
அசாம் கவுகாத்திப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் விசயகுமார் அவர்கள்
திருவாசகம் முழுவதையும் அசாம் மொழியில் தந்துள்ளார்.

அவற்றைத் தேவாரம் மின்னம்பலம் தளத்தில் www.thevaaram.org முழுவதுமாக ஏற்றி உள்ளோம்.

இந்தத் தலைமுறையில்
முன்னெப்பொழுதும் எவரும் செய்யாத முயற்சியை
சிவபெருமான் சிங்கப்பூர்ச் சைவத் தமிழ் அடியவர் நிதி நல்கிச் செய்துள்ளார்.

அச்சுட்ட புத்தகமாக வெளிவரவும் அவற்றை அசாமில் உள்ள நூலகங்களில் சேர்ப்பிக்கவும் முயற்சிக்கிறோம். நன்கொடையாளரை வரவேற்கிறோம்.

இம் மொழிபெயர்ப்புப் பணியை ஒருங்கிணைக்குமாறு ஆணையிட்டோர் தருமை ஆதீனத்தார்.

ஒருங்கிணைப்பில் என்னை வழிநடத்திய அருள்மிகு சிவகாமி உடனுறை நடராசப் பெருமான்.

திருவருளைப் போற்றுகிறோம்.

Recommended For You

About the Author: webeditor