ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு இணைந்ததாக நவராத்திரி விழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கனடா ரொடன்ரோவை வதிவிடமாகக்கொண்ட சிவஸ்ரீ் . பால. திருகுணானந்தக் குருக்கள் அவர்களின் அனுசரணையுடன்
சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் 32 அறநெறிப் பாடசாலைகளில் நவராத்திரி விழா 26.09.2022 திங்கட்கிழமை தொடக்கம் 05.10.2022 புதன்கிழமை வரை மாலை 3.30 மணி வரை இடம்பெறவுள்ளது.
அந்தவகையில் 03.10.2022 திங்கட்கிழமை சிறுப்பிட்டி அண்ணமார் அறநெறிப் பாடசாலையில் மாலை 3.30 மணிக்கு இந்து சமய கலாசார உத்தியோகத்தர் திருமதி பிரபா செல்வரூபன் அவர்களின் தலைமையில் நவராத்திரி விழா இடம்பெற்றது.
சரஸ்வதி பூஜை , நாவலர் குருபூஜை மற்றும் தலைமையுரையினை தொடர்த்து ‘ சக்தி வழிபாடும் சைவமும் ‘ என்னும் விடயப்பொருளில் சைவப்புலவர் ச.முகுந்தன் அவர்களின் சொற்பொழிவு நிகழ்வும் , சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்வும் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் சரஸ்வதி பாமாலை இலவசமாக வழங்கப்பட்டது.