காணிப் பிரச்சினைகளை உரிய முறையில் கையாள்வது தொர்பிலும் தகவல் சேகரிப்பு படிவங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்..!

காணிப் பிரச்சினைகளை உரிய முறையில் கையாள்வது தொர்பிலும் தகவல் சேகரிப்பு படிவங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்..!

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிப் பிரச்சினைகளை உரிய முறையில் கையாள்வதற்கான தகவல் சேகரிப்பு படிவங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் இன்றைய தினம்(11) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலானது வடமாகாண காணி ஆணையாளர் திரு.குருபரன் அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

மாவட்டத்தில் பல்வேறு காணிப் பிரச்சினைகள் தொடர்ச்சியாக காணப்படுகின்றது. இவற்றை இலகுவானமுறையில் தீர்த்துக் கொள்ளவும், அவற்றை ஆவணப்படுத்தவும், மக்களுக்கு விரைவாக காணி ஆவணங்களை பெற்றுக் கொடுத்தல் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

காணி தொடர்பான நெறிமுறைகளை ஒழுங்குமுறையில் செயற்படுத்திடும் நோக்கில் குறித்த கலந்துரையாடல் மேற்க்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ச.மஞ்சுளாதேவி(நிர்வாகம்), மேலதிக அரசாங்க அதிபர் சி.ஜெயக்காந்(காணி), பிரதேச செயலாளர்கள் உதவிப் பிரதேச செயலாளர்கள், காணிப்பகுதி உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin