யாழில் சட்டவிரோதமாக சொத்து குவித்த சந்தேகத்தின் பெயரில் வர்த்தக நிலையம் சோதனை..!

யாழில் சட்டவிரோதமாக சொத்து குவித்த சந்தேகத்தின் பெயரில் வர்த்தக நிலையம் சோதனை..!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் HM brothers Car Sales என்ற கார் விற்பனை நிலையத்தில் இன்று சோதனை நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வாகன விற்பனை நிலையமான HM brothers Car Sales பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சுற்றி வளைப்பை மேற்கொண்டனர்.

 

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய குறித்த சோதனை நடத்தப்பட்டது.

 

சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த சிலருக்கு எதிராக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

இதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் HM உரிமையாளரின் கையடக்க தொலைபேசிக்கு அண்மையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சைக்கிள் கட்சி உறுப்பினர் அத்தான் என்பவனின் மகன் முத்து என்பனனின் தொலைபேசியில் இருந்து 4 கைத்துப்பாக்கிகள் விற்பனைக்கு உண்டு வேண்டுமா என கேரி கைத்துப்பாக்கிகளின் புகைப்படம் அனுப்பபட்டிருந்தமை பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதனொரு கட்டமாக குறித்த நபரின் விற்பனை நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது.

Recommended For You

About the Author: admin