வாகனங்களுக்கான அதிகபட்ச குத்தகை விகிதங்கள் திருத்தம்: மத்திய வங்கி அறிவிப்பு !

வாகனங்களுக்கான அதிகபட்ச குத்தகை விகிதங்கள் திருத்தம்: மத்திய வங்கி அறிவிப்பு !

நாட்டில் வாகனக் கொள்வனவு மற்றும் இறக்குமதி தொடர்பான நிதி நிலைமைகளை ஒழுங்குபடுத்தும் முகமாக, இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வாகனங்களுக்கான அதிகபட்ச குத்தகை (Leasing) விகிதங்களை மீளாய்வு செய்யத் தீர்மானித்துள்ளது.இந்தத் திருத்தத்தின்படி, வாகனங்களை குத்தகைக்கு வழங்குவதற்கான அதிகபட்ச விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய குத்தகை விகிதங்கள்

வர்த்தக வாகனங்கள்: வர்த்தக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான அதிகபட்ச குத்தகை விகிதம் 70 வீதமாகக் (70%) குறைக்கப்பட்டுள்ளது.

தனியார் வாகனங்கள்: மோட்டார் கார்கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கான அதிகபட்ச குத்தகை விகிதம் 50 வீதமாக (50%) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரிவுகளின் ஒருங்கிணைப்பு

இந்த சமீபத்திய திருத்தத்தின் கீழ், கடந்த ஜூலை மாதம் நடைமுறையில் இருந்த வாகனங்களுக்கான நான்கு பிரிவுகளும் தற்போது இரண்டு முக்கியப் பிரிவுகளாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
வர்த்தக வாகனங்கள் & ஏனைய வாகனங்கள் (இதில் கார், வேன், முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற தனியார் போக்குவரத்து வாகனங்கள் அடங்கும்).

கடந்த ஜூலை மாதத்தில், வர்த்தக வாகனங்களுக்கு 80 வீதம், தனியார் வாகனங்களுக்கு 60 வீதம், முச்சக்கர வண்டிகளுக்கு 50 வீதம் மற்றும் ஏனைய வாகனங்களுக்கு 70 வீதம் என குத்தகை வசதிகள் அனுமதிக்கப்பட்டிருந்தன.

இந்த விகிதங்களே தற்போது ஒட்டுமொத்தமாக மறுசீரமைக்கப்பட்டு குறைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin