செல்வம் அடைக்கலநாதனை விசாரிக்க குழு..!

செல்வம் அடைக்கலநாதனை விசாரிக்க குழு..!

கட்சியின் மீது காழ்புணர்ச்சி கொண்ட , அரசியல் ரீதியாக சேறு பூச வேண்டும் என்ற நோக்கத்தில் சமூக ஊடகங்களில் பொய்பிரச்சாரங்கள் பரப்பப்படுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு கூட்டம் வவுனியாவில் இன்று நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக திட்டமிட்ட வகையிலே சில முகநூல்களிலும் இணையத்தளங்களிலும் நமது கட்சிக்கு எதிரான அல்லது கட்சியை களங்கப்படுத்தும் வகையில் சில ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விமர்சனங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

அது தொடர்பில் இன்று ஆராய்ந்திருந்தோம். எங்கள் கட்சியின் மீது காழ்புணர்ச்சி கொண்ட அல்லது அரசியல் ரீதியாக திட்டமிட்டு எங்கள் கட்சியின் மீது சேறு பூச வேண்டும் என்று அல்லது அரசியல் ரீதியாக எங்களை தாக்க வேண்டும் என திட்டமிட்டவர்கள் ஊடாகத்தான் இந்த விடயம் பிழையான ஒரு பிரசாரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது உண்மை இல்லையா என்பதை ஆராய்வதற்காக தலைமைக்குழுவிலே ஒரு முக்கியமான குழு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்கள் இந்த விடயங்களை ஆராய்ந்து பேராளர் மாநாட்டிலே இது சம்பந்தமான வெளிப்படுத்தலை மேற்கொள்வார்கள்.

Recommended For You

About the Author: admin