முதல் 10 மாதங்களில் வௌிநாட்டு பணவனுப்பல் 6 பில்லியனை கடந்தது..!
இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 ஒக்டோபரில் இலங்கைக்கு 712 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு பணவணுப்பல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2025 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான 10 மாதங்களில் வௌிநாட்டு பணவணுப்பல் மூலம் 6.52 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட 20.1% அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை, மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சுற்றுலா வருமானம் 2 பில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளது.
குறிப்பாக, 2025 இன் முதல் ஒன்பது மாதங்களில் மொத்த சுற்றுலா வருமானம் 2.47 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
இது 2024 இன் முதல் ஒன்பது மாதங்களில் பதிவான 2.34 பில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் 5.3% அதிகரிப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

