வட்ஸ்அப் மூலம் பணம் கோரும் மோசடி: முறைப்பாடுகள் அதிகரிப்பு
வட்ஸ்அப் செயலி (WhatsApp) வழியாக பணம் கோருவது தொடர்பான மோசடி முறைப்பாடுகள் அண்மைக் காலமாகப் பெருமளவில் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த திணைக்களத்தின் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் (ASP) டபிள்யூ. ஜி. ஜெயனெத்சிறி, கடந்த சில நாட்களாக இவ்வாறான முறைப்பாடுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, வட்ஸ்அப் குழுக்களைப் பயன்படுத்தும் நபர்கள் இந்த வகையான மோசடிகள் குறித்து மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

