மீசாலை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா..!
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் மீசாலை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாதப் பரிசளிப்பு விழா எதிர்வரும் 07.11.2025 வெள்ளிக்கிழமை
பிற்பகல் 2:30 மணிக்கு
சாவகச்சேரி, பொன்விழா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர், வ.ஸ்ரீபிரகாஸ் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில்
பிரதம விருந்தினராக தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சத்தியசோதியும்,
சிறப்பு விருந்தினராக தென்மராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்வி இ. அபிராமியும்,
கௌரவ விருந்தினர்களாக
யா/மீசாலை விக்னேஸ்வரா மகாவித்தியாலய அதிபர் திருமதி சுதாமதி தயாபரன்,
யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி பிரதி அதிபர் திருமதி கஜேந்தினி மகிந்தன்,
யா/மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலையின் பதில் அதிபர், கந்தசாமி சத்தியானந்தன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இதன்போது விசேட நிகழ்வாக “மாந்துளிர்” என்ற நூல் வெளியீட்டு வைபவம் இடம்பெற உள்ளது.
அத்துடன் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

