முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாளின் பேட்டி குறித்து..!
ஒரு கதிரை வாங்கக்கூட மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை என்றுகூறி தமிழீழப் பிரகடனம் செய்துவிட்டு இந்தியாவுக்கு ஓடியவர்,
இப்ப வந்து அந்த மாகாணசபையை அனைவரும் ஒன்று சேர்ந்து கோர வேண்டும் என்கிறார்.
ஒன்று சேர்ந்து வந்தால் மாகாணசபையை பெற்று தருவதாக இந்தியா கூறவில்லை. அப்படியிருக்க எதற்காக அந்த மாகாண சபையை கோர வேண்டும் என இவர் கூறுகின்றார்?
கிட்டுவுக்கு கிரினைட் எறிந்தது புளட் இயக்கத்தில் இருந்து விலகிய குழுவினர் என்பது தற்போது பலருக்கும் தெரியும்.
அப்படியிருக்க மாத்தையாதான் எறிந்தது என்று இவர் கூறுகின்றார். ஆள் இன்னும் அப்டேட் ஆகவில்லை .
முஸ்லிம்கள் மீது ரொம்பவும் கரிசனை இருப்பதாக காட்டுகிறார்.
ஆனால் உண்மை என்னவெனில் கிழக்கு மாகாணத்தில் முதன் முதலாக 1984ல் பாவற்குடிசேனையில் குடியிருந்த முஸ்லிம்களை அடித்து விரட்டியது இவரது ஈபிஆர்எல்எவ் இயக்கமே.
இவர் எந்த இந்தியாவுக்காக வக்காலத்து வாங்கிறாரோ அதே இந்தியாதான் 1984ல் இவர்கள் அலன் தம்பதிகளை கடத்தியபோது இவர்களை பிடித்து உதைத்து அலன் தம்பதிகளை விடுதலை செய்வித்தது.
ஆச்சரியம் என்னவெனில் ஜனாதிபதி ஜெயவர்த்தனா இவர்கள் கோரியபடி சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய முன்வந்தார்.
ஆனால் இந்திரா காந்தி இலங்கை அரசு கோராமலே இதில் தலையிட்டு அலன் தம்பதிகளை விடுதலை செய்வித்தார்.
அதாவது ராஜிவ் காந்தி கொலைக்கு முன்னரே இந்தியா ஈழப் போராளிகளுக்கு ஆதரவாக இருக்கவில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
இவரது இயக்கத்தின் பெயர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி. இதில்
ஈழத்தை கைவிட்டுவிட்டார்.
புரட்சியைக் கைவிட்டுவிட்டார்.
விடுதலையையும் கைவிட்டுவிட்டார்.
பாவம். இவருக்கும் பசிக்கும்தானே? அதனால் மாகாணசபையை தூக்கிக் கொண்டு வருகிறார்.

