சுற்றுலா சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை..!

சுற்றுலா சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை..!

இலங்கையின் சுற்றுலாத் துறையில் விரைவான வளர்ச்சியை அடைய சுற்றுலாச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வௌிவிவகாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்த இந்த அரசாங்கம் நீண்டகாலத் திட்டத்தையும் இலக்கையும் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

சுற்றுலாத் துறையை மேம்படுத்த அனைத்து நிறுவனங்களின் ஒன்றிணைப்பது அவசியம் என்பதால், இதற்காக ஒரு தேசிய சுற்றுலா ஆணைக்குழு ஒன்றை நிறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

தேசிய சுற்றுலா ஆணைக்குழு மூலம் மாவட்ட மட்டத்தில் மற்றும் சுற்றுலா வலய மட்டத்திலும் கூட்டு சுற்றுலாக் குழுக்களை நிறுவுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

 

இந்த நோக்கத்திற்காக தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாததால் சுற்றுலாச் சட்டம் திருத்தப்படுவதுடன் அந்த பொறுப்பு நிபுணர்கள் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: admin