மட்டுவில் வில்சன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முதியோர்தின நிகழ்வு..!
தென்மராட்சி மட்டுவில் கிழக்கு வில்சன் சனசமூக நிலையத்தின் 2025ஆம் ஆண்டிற்கான முதியோர் தின நிகழ்வுகள் அண்மையில் இளஞ்சிட்டுக்கள் சிறுவர் கழக மைதானத்தில் சனசமூக நிலையத் தலைவர் வ.தவராசா தலைமையில் இடம்பெற்றிருந்தன.
மேற்படி முதியோர் தின நிகழ்வில் பிரதம விருந்தினராக சாவகச்சேரிப் பிரதேசசபைத் தவிசாளர் பொ.குகதாசனும்,சிறப்பு விருந்தினர்களாக சாவகச்சேரி நகராட்சி மன்ற சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெ.செல்வராணி,ஓய்வுபெற்ற கதிரியக்க தொழில்நுட்ப வல்லுனர் கருணைவேல், ஓய்வுபெற்ற தகவல் தொழில்நுட்ப விரிவுரையாளர் திருமதி க.மைதிலி மற்றும் கைதடி சேதுகாவலர் வித்தியாலய அதிபர் செ.ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.


