கல்கிசை பகுதியில் வழக்கறிஞர் ஒருவருடன் முட்டிக்கொண்ட பொலிஸ் கான்ஷ்டபிளுக்கு இன்று மகத்தான வரவேற்பு.!
கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் வைத்து வாகனம் ஒன்று தொடர்பாக அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவருடன் பொலிஸ் கான்ஷபில் ஒருவர் தர்க்கத்தில் ஈடுபட்டார் அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார், சம்பவத்தின் போது குறிப்பிட்ட வழக்கறிஞர் தகாத வார்த்தைகளால் திட்டினார் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் வழக்கறிஞர் விசாரணைக்கும் அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்டிருந்த பொலிஸ் கான்ஷபிள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரின் வருகையை நீதி மன்றத்தின் அருகில் கூடியிருந்த குழுவொன்று கொண்டாடியதுடன், பிரதான பாதையில் அவரை தோளில் சுமந்து சென்ற சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
நேற்று நடைப்பெற்ற இந்த சம்பவம் குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானதுடன், நீதியை அனைவருக்கும் சமமாக வழங்கவும் தனது கடமையை சரியாகவும் செய்துள்ளார் என சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஷ்டபிள்க்கு பலரும் பாராட்டும் ஆதரவும் தெரிவித்துவந்தமை குறிப்பிடத்தக்கது.


