இலங்கை சிறைகளில் 35 ஆயிரம் கைதிகள்..!

இலங்கை சிறைகளில் 35 ஆயிரம் கைதிகள்..!

2025 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை, நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் 34,765 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

அவர்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 10,509 கைதிகளும், 24,256 சந்தேகநபர்களும் அடங்குவதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் வாய்மூல வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே இதனைத் கூறியுள்ளார்.

 

இந்தநிலையில், மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களைத் தவிர, ஏனைய சிறு சிறைத்தண்டனைகளை அனுபவிக்கும் கைதிகளை, விடுதலை நாளில் விடுவிக்க மட்டுமே சட்டப்பூர்வ அதிகாரம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

2025 ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை அபராதம் செலுத்த முடியாத நிலையில் 2,122 கைதிகள் சிறையில் இருப்பதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin