இறைச்சி விற்பனை நிலைய சோதனையின் போது கடுப்பாகிய தவிசாளர்..!

இறைச்சி விற்பனை நிலைய சோதனையின் போது கடுப்பாகிய தவிசாளர்..!

கிண்ணியா நகர சபை எல்லைக்குள் அமைய பெற்றிருக்கும் இறைச்சி கடைகள் சம்பந்தமான பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து நேற்று(03) தவிசாளர் தலைமையிலான குழுவினர் களத்துக்கு நேரடியாக விஜயம் செய்தனர்.

அதன் பிரகாரம் அந்தக் கடைகளை பரிசோதனை செய்வதற்காக தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையில் களவிஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, ஏழு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனால் கொள்வனவு செய்யப்பட்டிருந்த இறைச்சி விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டடுள்ளது.

அந்த இறைச்சியில் அதிகமான கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்ததனால் கோபமுற்ற தவிசாளர் கடைக்காரரிடம் காண்பித்து எச்சரிக்கை செய்து பொருத்தமான இறைச்சி அச்சிறுவனுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

விற்கப்படுகின்ற இறைச்சியின் நிறைகள், தரம் குறித்து பரிசோதனை செய்து வியாபாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டதோடு கொள்வனவுக்காக காத்திருந்த மக்களிடம் கொள்வனவின் போது ஒவ்வொருவரும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இறைச்சியை வாங்குகின்ற போது அதன் விலை குறித்து வாடிக்கையாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அவற்றை மேன்முறையீடு செய்வதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin