மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களை ஜனாதிபதி சந்தித்தார்..!

மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களை ஜனாதிபதி சந்தித்தார்..!

அஸ்கிரிய மற்றும் மல்வத்து தரப்பு மகாநாயக்க தேரர்களை நேற்று (03.10.2025) பிற்பகல் சந்தித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களிடம் ஆசி பெற்றார்.

முதலில், மல்வத்து மகா விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகா நாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசி பெற்றதோடு அவருடன் சிறிது நேரம் உரையாடலில் ஈடுபட்டார்.

பின்னர், அஸ்கிரிய மகா விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அஸ்கிரிய மகா நாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் அவர்களின் நலம் குறித்து கேட்டறிந்ததோடு அவருடனும் சிறு உரையாடலில் ஈடுபட்டார்.

Recommended For You

About the Author: admin