மரபுரிமைச்சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்..!
சாவகச்சேரிப் பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பாரம்பரிய மரபுரிமைச் சின்னங்களைப் பிரதேசசபை பேணிப் பாதுகாக்க வேண்டும் என சபை உறுப்பினர் செ.மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆவுரஞ்சிக் கல்,சுமை தாங்கி மற்றும் பழமையான பொதுக் கிணறுகள் பராமரிப்பற்ற நிலையில் காணப்படுகின்றன.அவற்றை பராமரித்து பாதுகாக்க வேண்டிய தேவை பிரதேசசபைக்கு உள்ளது.
அத்துடன் பல இடங்களில் பிரதேசசபைக்கு சொந்தமான காணிகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
அவற்றை அடையாளம் கண்டு பிரதேசசபைச் சொத்துக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கச்சாய் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் பொதுமகன் ஒருவர் பிரதேசசபைக்கு வழங்கிய காணி பற்றைக் காடாக காட்சியளிக்கின்றது சபையானது முதலில் தனது காணிகளை துப்பரவாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

