புதிதாக நியமனம் பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் பொறுப்பேற்பு..!
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் புதிதாக நியமிக்கப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களில், மன்னார் மாவட்டச் செயலக நிர்வாக எல்லைக்குள் நியமிக்கப்பட்ட எட்டு (08) உத்தியோகத்தர்கள் இன்று (01.10.2025) மாலை 4.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களை சந்தித்து தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வின்போது, புதிதாக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான சேவை நிலையங்கள் தொடர்பில் கலந்துரையாடி, தேவையான வழிகாட்டுதல்களையும் மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கினார்.
மேலும், குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) மற்றும் உள்ளக கணக்காய்வாளரும் கலந்து கொண்டிருந்தனர்.


