கடலோடு கலக்கும் ஆற்று நீரை வடக்கிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்..!

கடலோடு கலக்கும் ஆற்று நீரை வடக்கிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்..!

தென்னிலங்கையில் வீணாக கடலோடு கலக்கும் ஆற்று நீரை வடக்கு மாகாணத்திற்கு எடுத்து வர கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை கல்வி அபிவிருத்திக் குழுமத்தின் காப்பாளர் ந.சச்சிதானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

வடக்கு மாகாணத்திற்கு கல்வி எந்தளவு முக்கியமோ அந்தளவிற்கு நீரும் முக்கியம்.
தற்போது வடக்கு மாகாணத்தில் பல கிராமங்கள் நன்னீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் விவசாயம் பாதிப்படைந்துள்ளது.

நீர்த்தேவையை பூர்த்தி செய்ய மக்கள் அதிகளவில் குழாய் கிணறுகளை அமைக்கின்றனர்.இதனால் நிலத்தடி நீர் தீர்ந்து கடல் நீர் உட்புகும் நிலை காணப்படுகின்றது.
வடக்கில் நீர் பிரச்சனையால் பெரும்பாலான இடங்களில் ஒருபோகம் மாத்திரமே நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.வறட்சியான காலங்களில் பயிர் நிலங்கள் கட்டாந்தரைகளாக காட்சியளிக்கின்றன.

எனவே தென்பகுதியில் கடலோடு கலக்கும் ஆற்று நீரை வாய்க்கால் ஊடாக வடக்கு மாகாணத்திற்கு எடுத்து வந்து வடக்கு மண்ணை குளிர்விக்க கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனூடாக வடக்கில் அனைத்து காலத்திலும் விவசாய செய்கைகளை மேற்கொள்ள முடிவதுடன்
நிலத்தடி நீரையும் பாதுகாக்க முடியும்.அத்துடன்
பொருளாதார ரீதியாக மக்களும் அரசும் முன்னேற இயலும்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

Recommended For You

About the Author: admin