முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தொழிற்சந்தை..!
முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து நடாத்திய மாவட்ட தொழிற்சந்தையானது மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இன்றைய தினம் (29) காலை 09.30 மணி தொடக்கம் பி. ப. 12.30 மணி வரை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
தொழில் வாய்ப்பு மற்றும் வழிகாட்டல், உயர்கல்வி, வெளிநாட்டில் கல்வி கற்க்க விரும்புவோர் முதலானேருக்கான சிறந்த வழிகாட்டல் நிகழ்வாக இது அமைந்து.
இன்றைய தொழிற்சந்தை நிகழ்வில் 110 இற்கு மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் கலந்து கொண்டதுடன், 90 பாடசாலை மாணவர்களுக்களும் தொழில் வழங்கும் 15 நிறுவனங்களும்,08 பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி. ஜெயகாந், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.லி.கேகிதா, மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் திரு.த . சுரேஸ்குமார், மாவட்ட மற்றும் பிரதேச செயலக மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பங்குபற்றினார்கள்.


