கைது செய்யப்படுவாரா விஜய்..!
ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு.
கரூர் பிரசார கூட்டதில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆணையம் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் (Vijay) கைது செய்யப்படுவாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் ஆராய உயர் நீதிமன்றத்தினுடைய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையகம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் உண்மைகள் வெளிவரும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இத்தனை பேரை இழந்த துயரமான சம்பவம் இதுவரை நடக்கவும் இல்லை. இனிமேல் நடக்கக் கூடாதது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்து இலட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை. விசாரணை ஆணையம் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

