நெடுந்தீவில் சாராயக்கடையில் இடம்பெற்ற வாள் வெட்டில் இருவர் காயம்..!
பொலிஸார் மீதும் தாக்குதல்:ஒருவர் கைது-
நெடுந்தீவு தனியார் விருந்தக மதுபானசாலையில் நேற்று( 16.09.2025) இரவு 7 .00 மணியளவில்
இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
நெடுந்தீவு மதுபானசாலையில் இன்று இரவு 7.00 மணியளவில் திடீரென புகுந்த இளைஞர்குழு மதுபானசாலைக்குள் இருந்த இளைஞர் குழுமீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இரண்டுபேர் தலையிலும் முகத்திலும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன்்
குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் மீதும் வாள்வெட்டுக்குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச்செல்ல முற்பட்டபோது ஒருவர் கைதுசெய்யப்பட்டு நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன்
தப்பிச்சென்றவர்களை தேடி கைது செய்யும் வகையில் பொலிசார் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
வீதியால் சென்ற பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாள்வெட்டுக்குழுவினர் மோட்டார் சைக்கிளில் பயணித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
குறித்த மதுபானசாலையில் இதற்கு முன்னரும் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

