கிளிநொச்சி வினாசியோடை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் சாதனையாளர்கள் கௌரவிப்பு..!

கிளிநொச்சி வினாசியோடை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் சாதனையாளர்கள் கௌரவிப்பு..!

பூநகரி கௌதாரிமுனை வினாசியோடை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் சாதனையாளர்கள் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.

 

ஹரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினரின் அனுசரணையுடன் நடைபெற்ற நிகழ்வில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

 

பெண்தலைமைத்துவ சிறு குழுக்களின் தலைவி ராஜினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கியூடெக் நிறுவனத்தின் இயக்குனர் கௌதாரிமுனையின் பங்குத்தந்தை பாடசாலையின் ஆசிரியர்கள் கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வு நிறைவுற்றதும் பாடசாலையின் தேவைகள், குடிநீர் பிரச்சினைகள் மற்றும் கிராமத்தின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Recommended For You

About the Author: admin