மல்லாகத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனி..!
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையால் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனி மல்லாகத்தில் நடைபெற்றது
வலி வடக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு இன்று (17) காலை டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி மல்லாகம் விசலாட்சி வித்தியாலயத்தில் ஆரம்பித்து யாழ் – காங்கேசந்துறை வீதியூடாக துண்டுப் பிரசுரங்கள் வழங்கி யாழ் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி வரை முன்னெடுக்கப்பட்டது
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலையில் நடைபெற்ற இந்த நடைபவனியில் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி Dr. பரா நந்தகுமார் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் அதிகாரிகரிகள் பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்
யாழ் மல்லாகத்தில் இருந்து காங்கேசந்துறை யாழ் காங்கேசந்துறை வீதியில் காணப்படும் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் வர்த்தகர்கள் பொதுமக்கள் எனப்பலரும் இந்த நடை பவனியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டனர்


