கிளிநொச்சியில் சமூக சக்தி(பிரஜா சக்தி) வறுமை ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு..!

கிளிநொச்சியில் சமூக சக்தி(பிரஜா சக்தி) வறுமை ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு..!

நாடு முழுவதிலும் உள்ள வறுமையை ஒழித்து சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டம், அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் கடந்த ஜீலை மாதம் 04ம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற விழாவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்தினால் சமூக சக்தி(பிரஜா சக்தி) வறுமை ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட திணைக்கள தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு இன்று(17.09.2025) புதன்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.

 

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் தமிழ் மொழி மூலமாக காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.

 

இதன் வளவாளராக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் சாரஞ்சலி மனோகரன் அவர்கள் கலந்து கொண்டார்.

 

குறித்த வேலைத்திட்டம் வறுமையை ஒழித்து நாட்டு மக்களை அனைத்து வகையிலும் வளமான மனிதர்களாக மாற்றியமைக்கும் நோக்கில் “செழுமையான தேசம் பசுமையான வாழ்க்கை” எனும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

 

மேலும் குறித்த செயலமர்வு சம நேரத்தில் சிங்கள மொழி மூலமாக மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இக் கருத்தரங்கில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலகங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலக இணைப்பாளர் மற்றும் விடய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin