கிளிநொச்சி உருத்திரபுர வட்டாரத்தின் பொது அமைப்புக்களுடனான சந்திப்பு.!
உருத்திரபுரம் வட்டாரத்தின் பொது அமைப்புகள் மற்றும் உருத்திரபுரம் வடக்கு கிராமத்தின் பொது அமைப்புகளை நேற்றைய தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார்.
உருத்திரபுரம் சந்தைப் பகுதியில் நிலவும் நீர் பிரச்சினை தொடர்பிலும் ஏனைய தேவைகள் தொடர்பிலும் சமகால அரசியல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் கரைச்சி பிரதேச சபையின் வட்டார உறுப்பினர் பா.எழில்வேந்தன் ஓய்வுநிலை அதிபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


