யாழில் மகாத்மா காந்தியின் 153 ஆவது ஜனனதினம்

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் எற்பாட்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தியின் 153 ஆவது ஜனனதினம் இன்று யாழில் நினைகூரப்பட்டது.

இந்நிகழ்வு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மகாத்மா காந்தியின் சிலையடியில் இடம்பெற்றது.

இதில் பிரதம விருந்தினராக யாழ். இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜ் கலந்துகொண்டு, காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்ததுடன் மலரஞ்சலி செலுத்தினார்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் இலங்கை சிவசேனையின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழ். மாநகர சபை பிரதி முதல்வர் து.ஈசன், யாழ். இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் மற்றும் அலுவலகர்கள், மாணவர்கள், சமுக நலன் விரும்பிகள், மதத்தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

இதன்போது காந்தீயம் சஞ்சிகையினை யாழ். இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜ் வெளியிட யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் பெற்றுக்கொண்டார்

Recommended For You

About the Author: webeditor