மாதகல் சகாயபுரம் கருணை வைரவர் அறநெறிப் பாடசாலையில் நவராத்திரி விழா

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் ஆண்டிலே (2022)
இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு, இணைந்ததாக நவராத்திரி விழா முன்னெடுக்கப்படவுள்ளது.

கனடா, ரொன்ரோவை வதிவிடமாகக்கொண்ட
சிவஸ்ரீ் . பால. திருகுணானந்தக் குருக்கள் அவர்களின் அனுசரணையுடன்,
சமயஜோதி திரு.கதிர்காமன் நிஜலிங்கம் அவகளின் ஒழுங்கமைப்பில்,
32 அறநெறிப் பாடசாலைகளில் நவராத்திரி விழா. 26.09.2022 திங்கட்கிழமை தொடக்கம்
05.10.2022 புதன்கிழமை வரை மாலை 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் 01.10.2022 சனிக்கிழமை மாதகல் சகாயபுரம் கருணை வைரவர் அறநெறிப் பாடசாலையில் மாலை 3.30 மணிக்கு இந்து சமய கலாசார உத்தியோகத்தர் திருமதி அகல்யா ஜனார்த்தனன் அவர்களின் தலமையில் இடம்பெற்றது.

சரஸ்வதி பூஜை , நாவலர் குருபூஜை மற்றும் தலைமையுரையினை தொடர்த்து ” சகதி வழிபாடும் சைவமும் ” என்னும் விடயப்பொருளில் இளம்சைவப்புலவர் ச.நவநீதன் அவர்களின் சொற்பொழிவு நிகழ்வும் , சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்வும் நிகழ்வில் கலத்துகொண்ட அனைவருக்கும் சரஸ்வதி பாமாலை இலவசமாக வழங்கப்பட்டது.

Recommended For You

About the Author: webeditor