ஒரு தாய் பிள்ளைகளாய் பிரதேச அபிவிருத்திக்காக ஒன்றிணைவோம்..!
சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் ஸ்ரீபிரகாஷ்
ஒரு தாய் பிள்ளைகளாய் பிரதேச அபிவிருத்திக்காக ஒன்றிணைய வேண்டும் என சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் ஸ்ரீபிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
உறுப்பினர்கள் தம்மிடம் இருக்கும் பிரச்சனைகளை அன்பாகவும் அதேநேரம் கோரிக்கையாகவும் வினவ வேண்டும்.பிரச்சனைகளை முன்மொழியும் உரிமை சகலருக்கும் உண்டு.அதற்கு பொறுப்புக்கூற வேண்டிய கடமை தவிசாளர் என்ற வகையில் எனக்கு உள்ளது.பிரச்சனைகளை நாகரீகமான முறையில் முன்மொழியும் பட்சத்தில் எம்மால் ஊக்கமாக பணிபுரிய முடியும்.
நாம் ஒரு தாயின் பிள்ளைகள்.எனவே இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக ஒன்றுபட வேண்டும்.
கௌரவமான சபையாக தொடர்ந்தும் இயங்க வேண்டும்.
மக்களுக்குச் செய்யும் சேவையை நிறைவானதாக செய்ய வேண்டும்.
அத்துடன் நீண்ட காலமாக புனரமைப்பு இன்றிக் காணப்பட்ட சாவகச்சேரிப் பொதுச்சந்தையின் பழக்கடைத் தொகுதி முழுமையாக துப்பரவு செய்யப்பட்டு சிறு சிறு திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதனை கண்காணித்த மற்றும் பங்களித்த உப தவிசாளர்,சபையின் சுகாதார குழு மற்றும் சந்தைக் குழு உறுப்பினர்களுக்கு நன்றிகள் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

