உள்ளூராட்சி வார்த்தை முன்னிட்டு நடமாடும் சேவையை முன்னெடுக்கும் சாவகச்சேரி நகரசபை..!
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் உள்ளூராட்சி வாரம் 15/09 திங்கட்கிழமை மீசாலை கிழக்கு வட்டாரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது மீசாலை கிழக்கு வட்டாரத்தில் நகரசபையினால் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது.
நடமாடும் சேவையினை நகரசபைத் தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஷ், உபதவிசாளர் ஞா.கிஷோர், நகரசபை செயலாளர் எஸ்.நிசான் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
இதன்போது நகராட்சி மன்றினால் ஆதனவரி அறவீடு, வியாபார உரிமம் வழங்கல், துவிச்சக்கர வண்டிக்கு இலக்கத்தகடு வழங்கல், வளர்ப்பு நாய்களுக்கான உரிமம் வழங்கல், பொதுக்கிணறுகள் சுத்திகரித்தல், குளம் தூர்வாருதல், வீதிகள் துப்பரவு செய்தல், வீதி விளக்குகள் பழுதுபார்த்தல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நடமாடும் சேவையில் தவிசாளர், உபதவிசாளர், உறுப்பினர்கள், செயலாளர், கணக்காளர், பொதுச்சுகாதாரப் பரிசோதகர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் உள்ளிட்ட நகராட்சி மன்றின் அனைத்து அலகு ஆளணியினரோடு கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோரும் பங்கெடுத்தனர்.


