2025 இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.9% வளர்ச்சி

இலங்கையின் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு 4.9% வளர்ச்சி அடைந்துள்ளதாக, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

2015 இன் மாறா விலைகளின் அடிப்படையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2024 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ரூ. 2,749 பில்லியனாக இருந்த நிலையில், 2025 இன் இரண்டாவது காலாண்டில் ரூ. 2,883 பில்லியனாக அதிகரித்துள்ளது.

​இக்காலப்பகுதியில், விவசாயத் துறை 2% வளர்ச்சியையும், கைத்தொழில் துறை 5.8% வளர்ச்சியையும், சேவைத் துறை 3.9% வளர்ச்சியையும் கண்டுள்ளன.

Recommended For You

About the Author: admin