530 மில்லிகிராம் ஹெரோயினுடன் யாழ்ப்பாணத்தில் மூவர் கைது

530 மில்லிகிராம் ஹெரோயினுடன் யாழ்ப்பாணத்தில் மூவர் கைது ​யாழ்ப்பாணம் திருநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) 530 மில்லிகிராம் ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

​யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

​சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin