ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்குப் பயணம்
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக செப்டெம்பர் 22ஆம் திகதி அமெரிக்காவுக்குப் பயணம் செய்யவுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, அவர் பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளதுடன், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸையும் சந்திக்கவுள்ளார்.
அமெரிக்காவிற்கான தனது விஜயத்தை நிறைவு செய்த பின்னர், ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் செப்டெம்பர் 26ஆம் திகதி ஜப்பானுக்கு அரசமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜப்பானில், அவர் செப்டெம்பர் 27ஆம் திகதி உலக எக்ஸ்போ சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் கலந்துகொள்வதுடன், உயர் மட்ட ஜப்பானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளார்.

